தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழாவில் இன்று பக்தர்கள் அலையென திரண்டிருந்தனர். இன்று முற்பகல் சுமார் 07:00 மணியளவில் பூஜைகளுடன் ஆரம்பித்திருந்த தேர் திருவிழா மதியம் வரை நீடித்திருந்தது.
ஏற்கனவே எதிர்பார்த்திருந்தது போலவே தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்துக்கு மிக அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கூடும் விழா இதுவென்பதால், யாழ்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் அலையென வந்திருந்தார்கள். அரச மற்றும் தனியார் பஸ் சேவைகளும் பல பிரத்தியேக சேவைகளை இன்று வழங்கியிருந்ததும் குறிப்பிடத்த்தக்கது
காவடிகள், தூக்குக்காவடிகள், பாற் சொம்புகள், பஜனைகள் என கோவிலின் வீதிகள் பக்தர்களின் நேர்த்திகளால் நிரம்பியிருந்தது. பக்தர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு ஆலயத்தின் புற வீதிகளில் பல்வேறு வியாபாரங்களும் சூடு பிடித்திருந்தது.
இன்றைய உற்சவத்தின் போது சாரணர் இயக்கத்தினர் பகதர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தொண்டைமானாறு இளைஞர்களால் நீர்ப்பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தாக சாந்தி சேவையில் ஈடுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.