ஆழ்கடல்கள் சென்றவர்கள் எனும் நூல் வெளியீடு நேற்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 19/08/2013 (திங்கட்கிழமை)
Florence க Robinson ex அன்னபூரணி எனும் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டு, வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தைச் சென்றடைந்திருந்த பாய்மரக் கப்பலின் 75 ஆவது அகவை நினைவு கூறுமுகமாக பல்வேறு நிகழ்வுகள் பலரால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதன் ஒரு நிகழ்வாக வல்வெட்டித்துறைச் சேர்ந்த திரு.சீவரத்தினம் அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள ஆழ்கடல்கள் சென்றவர்கள் எனும் நூல் வெளியீடு நேற்று (18-08-13) வல்வைச் சந்தியில் அமைந்துள்ள நகரசபை மண்டபத்தில் பிற்பகல் 04:00 மணியளவில் இடம்பெற்றது.
இவ் வெளியீட்டு விழாவானது வல்வெட்டித்துறை கலை, கலாச்சார இலக்கிய மன்றம மற்றும் வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கம் ஆகியவற்றினால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வல்வெட்டித்துறை கலை, கலாச்சார இலக்கிய மன்றம மற்றும் வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கம் உறுப்பினர்கள் உட்பட பாடசாலை அதிபர்கள், ஆலயக் குருக்கள், அரச அதிகாரிகள் அதிபர்கள், கடலோடிகள், எழுதாளர்கள், சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறையைச்சேர்ந்த பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், பருத்தித்துறை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கலாச்சார உத்தியோகஸ்தர் செல்வ சுகுணா அவர்கள் இவ்விழாவில் கலந்து மலரை கலந்து கொண்டவர்களுக்கு வழங்கி யிருந்திருந்தார்.
விழாவில் வல்வையின் மூத்த கடலோடியான திரு.நவரத்தினசாமி பொன்னாடை போர்த்தி கௌ ரவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கலாச்சார உத்தியோகஸ்தர் செல்வ சுகுணா அவர்கள்
வல்வையின் மூத்த கடலோடியான திரு.நவரத்தினசாமி அவர்கள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.