தொண்டைமானாறு செல்வச்சந்நிதி பூங்காவனத் இரவுத் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/08/2013 (வெள்ளிக்கிழமை)
யாழ்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா இன்று நடைபெற்றிருந்தது. இன்று முற்பகல் சுமார் 09:00 மணியளவில் ஆரம்பமாகியிருந்த மகோற்சவம் சுமர்ர் 13:30 மணிவரை நீடித்திருந்தது. இதைதொடர்ந்து இரவு மகோற்சவம் மாலை 06:00 மணியளவில் ஆரம்பித்து இரவு 09:00 மணியளவில் நிறைவெய்தியது.
பூங்காவன மகோற்சவத்தினை முன்னிட்டு, கடந்த நாட்களை விட இன்றையதினம் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவிருந்ததை காணக்கூடியதாகயிருந்தது. மேலும் முருகப்பெருமானுக்குரிய நேர்த்திகளான காவடி, தூக்குக் காவடி, பாற் சொம்பு, கற்பூரச் சட்டிகள் போன்றவையும் மிக அதிகமாக பக்தர்களால் அனுஸ்டிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.