பூக்காரரும் செல்வச்சந்நிதியும் - 9 ஆம் நாள் பகல் திருவிழா இன்று காலை நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2013 (புதன்கிழமை)
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 9 ஆம் நாள் பகல் திருவிழா இன்று காலை நடைபெற்றது.
படங்களில் இன்று காலை இடம்பெற்ற 9 ஆம் திருவிழா நிகழ்வுகளையும் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் வழக்கத்தில் இருந்து வரும் பூக்காரர் மற்றும் அவர்களின் பணிகளையும் காணலாம்.
இலங்கையில் மிகவும் புகழ் பூத்த முருகன் ஆலயமான செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 7 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது. மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா நாளை நடைபெறவுள்ளது.
பூக்காரர்
சில கட்டுப்பாடுகள் மற்றும் ஆச்சரங்களுடன் மகோற்சவத்தின் முதல் நாளன்று தீர்த்தம் குடித்தல் எனும் நிகழ்வுடன் ஆரம்பமாகும் பூக்காரர் பணி மிகவும் பரந்துபட்டது. பூப்பறித்தல் (இதற்காக இவர்கள் முன்னர் முல்லைத்தீவு வரை செல்வது குறிப்பிடத்தக்கது), பூக்களால் சுவாமியை அலங்கரித்தல், மடப்பள்ளிக்குரிய சில உதவிகள் , சுவாமியின் வாகனங்களை தயார் செய்தல், பகதர்களுக்குரிய சில தேவைகளைப் பூர்த்தி செய்தல் என மிக நீளும் தொண்டுகளை இவர்கள் மகோற்சவ காலம் முழுதும் செய்வது குறிப்பிடத்தக்கது.
சுமார் 5 வயது முதல் 80 வயது வரையான சுமார் 100 வரையானோர், பரம்பரையாக இப் பணியைச் செய்து வருகின்றார்கள்.
இதில் அதிகமானவர்கள் தொண்டைமானாறு பிரதேசத்தையும், குறிப்பிடக் கூடியவர்கள் வல்வெட்டித்துறைப் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இன்றைய 9 ஆம் நாள் பகல் திருவிழாவின் போதான சில காட்சிகள்

பூக்காரர்களில் சிலர்
பூக்காரர் அறை - பூங்காவான மண்டபத்தின் ஒரு பக்கத்தில் உள்ளது
பூக்காரர்களின் கை வண்ணங்களில் ஒன்று - செடி வேலைப் பாடுகள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.