வித்தியாமான முறையில் நடாத்தப்பட்ட முப்போட்டிகள், யாழ்பாணத்தின் பலபாகங்களிருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்றனர் - 80 படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/08/2013 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை உதய சூரியன் விளையாட்டுக்கழகத்தின் 50 ஆண்டு நிறைவு விழாவையொட்டிய, முதல் நாள் விளையாட்டுப்போட்டிகள் இன்று ஆரம்பமாகியது. மிகவும் வித்தியாமான முறையில் நடாத்தப்பட்ட இன்றைய நிகழ்வுகளில் யாழ்பாணத்தில் முதன்முறையாக முப்போட்டிகள் எனும் கோணத்தில் இடம்பெற்றிருந்தது.
நீச்சல் போட்டியானது ஊரணி தீர்த்தக்கடற்கரையிருந்து ஆரம்பிக்கப்பட்டு மதவடி உதயசூரியன் கடற்கரையில் முடிவடைந்தது. இப்போட்டியில் முதலாம் இடத்தை ரா. ரவிராஜ் (வியாபாரிமூலை ) , இரண்டாம் இடத்தைஅ.சுஜீவன் (விண்மீன் விளையாட்டுக்கழகம்), மூன்றாம் இடத்தை கு.கிருஷ்ணராஜா (ஆதிசக்தி விளையாட்டுக்கழகம்) ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.
படகோட்டமானது பருத்தித்துறை முனையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு மதவடி உதயசூரியன் கடற்கரையில் முடிவடைந்தது. இப்போட்டிக்கு 11 படகுகள் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது. முதல் இடத்தை த. அருந்தவராஜா (நாகர் கோவில் வி.கழகம்), இரண்டாம் இடத்தை ரா.இளங்கோ (தொண்டைமானாறு வி,கழகம்), மூன்றாம் இடத்தை செ. கோகுலராஜா( இன்பரூட்டி வி.கழகம்) ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.
கட்டுமரம் வலித்தல் போட்டியானது பொலிகண்டி ஆலடி கடற்கரையிலிருந்து உதயசூரியன் கடற்கரை வரை நடைபெற்றது. இப்போட்டியில் முதலாம் இடத்தை கி. கணேசரத்தினம் (விண்மீன் வி.கழகம்), இரண்டாம் இடத்தை கோ. குகதாஸ் (வல்வெட்டி வி.கழகம்), மூன்றாம் இடத்தை சா.சிவரூபன் (ரேவடி வி.கழகம்) ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.
இன்றையபோட்டியின் இறுதியாக வித்தியாசமான முப்போட்டி இடம்பெற்றிருந்தது. ஒரே தொடர்ச்சியான இப்போட்டியில் ஆரம்பமாக வல்வை கொத்தியால் கடற்கரையிலிருந்து நீச்சல் ஆரம்பமாகி உதயசூரியன் கடற்கரையில் முடிவடைந்து, இதன் தொடர்ச்சியாக அதே விளையாட்டுவீரர்களால் அதே இடத்திலிருந்து சைக்கிள் ஓட்டம் ஆரம்பமாகி நெடியகாட்டு பிள்ளையார் கோவில் வரை நடைபெற்று, பின்னர் அங்கிருந்து இறுதியாக அதே விளையாட்டுவீரர்களுடைய ஓட்டப்போட்டி வல்வை மதவடி வரை இடம்பெற்றிருந்தது.
இப்போட்டியில்முதல் இடத்தை உ.கிஷ்ணமூர்த்தி (மதவடி), இரண்டாம் இடத்தை தீ.மதீசன் (ஆதிசக்தி வி.கழகம், மூன்றாம் இடத்தை அ. சுஜீவன் (விண்மீன் வி.கழகம் ) ஆகியோரும் பெற்றுக்கொண்டனர். இபோட்டியில் 20 போட்டியாளர்கள் பங்குபற்றி 15 போட்டியாளர்கள் போட்டியை பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. முப்பாய்ச்சல் போட்டியில் முதல் மூன்று வெற்றியாளர்கள் தவிர ஏனைய வீரர்களுக்கு ஆறுதல் பரிசில்கள் உடனடியாக வழங்கப்பட்டது.
இன்றைய போட்டிகளில் யாழ்பாணத்தின் பலபாகங்களிருந்தும் போட்டியாளர்கள் பங்கு பெற்றிருந்ததும், போட்டிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நாளை (10.08.2013) காலை 06.30 மணிமுதல் 50 km சைக்கிள் ஓட்டம், 8 km மரதன் ஓட்டம் பெண்கள், கழக அஞ்சல் , பாரம் துக்கி ஓடுதல், 7வயதிற்கு உட்பட்டோர் சைக்கிள் ஓட்டம் போன்றனவும், மாலை 0400 மணிமுதல் முட்டி உடைத்தல், சாப்பாட்டுப்போட்டி போன்ற நிகழ்ச்சிகளும், தொடர்ந்து
நாளை மறுதினம் (11.08.2013) காலை 0630 மணிமுதல் சைக்கிள் ஓட்டம், மரதன் ஓட்டம் (ஆண்கள்) ,கழக அஞ்சல், தம்பதிகள் சைக்கிள் ஓட்டம், வினோத உடைப்போட்டி போன்ற நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.