கோலாகலமாக நடைபெற்ற இறுதிஆட்டம், மயிலங்காடு ஞானமுருகன், ஊரெழு றோயல்
இரு அணிகளும் இறுதிவரை சமபலத்துடன் மோதின.
பிரசுரிக்கபட்ட திகதி: 13/07/2013 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் 60 வது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்பட்டுவரும் உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் நேற்று இரவு மிகப்பிரமாண்டமான மின்னொளியில் நடைபெற்றது.
சர்வதேச உதைபந்தாட்ட சம்பிரதாய முறைப்படி ஆரம்பிக்கப்பட்டிருந்த இப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுகளில் மூத்த வல்வை விளையாட்டு வீரர்கள், மாவட்ட வைத்திய அதிகாரி, போலிஸ் உத்தியோகஸ்தர், நெடியகாட்டு இளைஞர் விளையாட்டுக் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
விளையாட்டு வீரர்களை கணபதி படிப்பகப் பாலர்கள் கைலாகு கொடுத்து வரவேற்றிருந்தனர். சுமார் இரவு 08:00 மணியளவில் ஆரம்பித்திருந்த நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் இரவு 2330 மணி வரை நீடித்திருந்தது. ரூபா 50/- நுழைவுக் கட்டணம் ஆக இருந்தும் மைதானம் முழுவதும் பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டிகளில் முதலில் மூன்றாம் இடத்திற்கான ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் கம்பர்மலை யங்கம்மன்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் யங்கம்மன்ஸ் விளையாட்டுக்கழகம் 1 : 0 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டி மூன்றமிடத்தினை தட்டிசென்றது.
அடுத்து இறுதியாட்டம் நடைபெற்றது . மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற இவ் இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் மோதியது.போட்டி முடியும் வரை இரு அணிகளும் தலா ஒரு கோல்களை பெற்றிருந்தனர்.
இறுதியில் தண்ட உதையில் ஞானமுருகன் விளையாட்டுக்கழகம் 4 : 1 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டி வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியது.
போட்டிகளைப் பார்ப்பதற்கு குறிப்பிடத்தக்க பெண்களும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியைப் பார்வயிட வந்திருந்த பெண் பார்வையாளர்கள்
FIFA கொடியுடன் நெடியகாட்டு வீரர்கள்
3 ஆம் இடத்துக்குப் போட்டியிட்ட கம்பர்மலை யங்கமன்ஸ், உடுப்பிட்டி நவஜீவன்
இறுதி ஆட்டத்தில் பங்கெடுத்த ஊரெழு றோயல் மயிலங்காடு ஞானமுருகன்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.