நேற்றைய நெடியகாடு இரவு மின்னொளி உதைபந்துப் போட்டியில் பெருமளவு பார்வையாளர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/07/2013 (திங்கட்கிழமை)
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் 60 வது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்பட்டுவரும் உதைபந்தாட்ட தொடரின் கால் இறுதியாட்டங்கள் நேற்று இரவு மிகப்பிரமாண்டமான மின்னொளியில் நடைபெற்றது.
முதலாவது கால் இறுதியாட்டத்தில் கம்பர்மலை யங்கம்மன்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மானிப்பாய் ரெட்ரேன்சஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. பிரகாஸ் , இரதன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் கம்பர்மலை யங்கம்மன்ஸ் விளையாட்டுக்கழகம் 6 : 0 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டி அரை இறுதியாட்டத்திட்கு தகுதிபெற்றது.
இரண்டாவது கால் இறுதியாட்டத்தில் வதிரி டைமன்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகம் 4 : 0 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டி அரை இறுதியாட்டத்திட்கு தகுதிபெற்றது.
இன்று இரவும் மின்னொளியில் இரண்டு கால் இறுதியாட்டங்கள் நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.