பாக்கு நீரினை காணாமல் போனவரை தேடும் பணி தொடர்கின்றது, சக மீனவர் பத்திரமாக கரை திரும்பினார்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2013 (திங்கட்கிழமை)
இன்று காலை வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இடி மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி காணாமல் போன, வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த செல்வன் தங்கவேலாயுதம் அருளானந்தம் என்பவரை தேடும் பணி தொடர்கின்றது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக ((Severe Cropical cyclonic storm - Mahasen) வல்வெட்டித்துறையிலும் இன்று காலை காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இதன் காரணமாக இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்த இருவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்கானார்கள். இதில் ஒருவர் கடலினில் தூக்கி வீசப்பட்டதாக நம்பப்படுகின்றது. மற்றவர் சிறிது நேரம் சுயநினைவு இழந்து பின்னர் கரை சேர்ந்துள்ளார்.
காலையில் நீடித்திருந்த சீரற்ற காலநிலையால், காணாமல் போனவரை தேடுவதற்கான முயற்சிகள் எடுக்க முடிந்திருக்கவில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.