முத்துமாரியம்மன் கோவிலில் மாரிதேவி உற்சவம் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2013 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறையில் ஒவ்வொரு ஆண்டும் மாரியம்மன் உற்சவமானது முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்றுவருகிறது. இது வல்வெட்டித்துறை சிவன் கோவில் வருடாந்த திருவிழாவின் ஒரு தொடக்கமாக நடைபெற்றுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த உற்சவமானது வல்வெட்டித்துறை சிவன் கோவிலில், கொடியேற்றத் திருவிழாவிற்காக மாணிக்கவாசகர் வீதி வலம் வரும் நாளுக்கு முன் வரும் திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழமை.
மேலும் குறிப்பாக இந்த உற்சவத்தின் அன்று, சிவன் கோயில் குருக்கள் அவர்களினால் அம்மன் கோவிலில் வீற்றிருக்கும் மூலஸ்தான அம்மன் மற்றும் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் எழுந்தருளி அம்மனுக்கு பூஜை செய்யப்படுவது இங்கு சிறப்புடன் நோக்கத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.