பல கிண்ணஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரரான ஆழிக்குமரன் ஆனந்தன் என்று அழைக்கப்படும் குமார் ஆனந்தன் அவர்களின் ( 25.05.1943 ) 71 வது பிறந்த தினம் இன்று ஆகும்.
வல்வெட்டித்துறை மட்டுமல்லாது இலங்கை பூராகவும் தனது அதீத திறமைகளாலும், தனது விடாமுயற்சியினாலும் பலரையும் தன் பக்கம் ஈர்த்தவர், இலங்கை அரசாங்கமும் அவரை சிறப்பிக்கும் முகமாக தபால் தலை ஒன்றையும் வெளியிட்டிருந்தது. வல்வெட்டித்துறையின் வீதிகளிலும் சரி இந்து சமுத்திரத்திலும் சரி இவரது சாதனைகள் அளப்பரியது, இன்னும் ஒரு படி மேலே சொன்னால் இவரது சாதனை எண்ணங்கள் கடல் கடந்தவையாகவும் காணப்பட்டன. எந்தவொரு விடயமாகினும் இவரது தன்னம்ம்பிக்கையும் விடாமுயற்சியும் எதையும் தாங்கும் மானோதிடமும்தான் இவரை இந்தளவிற்கு ஆகியது என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.
இறுதியாக ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்க முயன்றபோது அதீத குளிர் சுழியால் இறக்கும் தறுவாயிலும் " குளிர்ந்த கடலே எனக்கு கவலையை தருகின்றது. அதற்கேற்ப என்னைத் தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை" என்றவாறு ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனைப் பயணம் முடிவிற்கு வருகின்றது.
அலை ஒளி எனும் கையெழுத்துச் சஞ்சிகையின் அட்டைப்படத்தில் திரு ஆழிக்குமரன் ஆனந்தன். 1990 களில் இவ் இணையதளத்துடன் தொடர்புடைய இருவரால் வெளியிடப்பட்டிருந்த இப்பதிப்பில் திரு.ஆனந்தன் அவர்கள் சிறப்பிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
காலமும் சரி மக்களும் சரி சாதனை நாயகர்களை அவர்களின் காலத்திலேயே நினைவில் கொள்ளும் அதன் பின்பு அவர்களின் நினைவுகளிலிருந்து மெல்ல விடுபடும் என்பதில் ஆழிக்குமரன் ஆனந்தன் ஒன்றும் விதிவிலக்கில்லை. இருப்பினும் சிறு முயற்சியாக ஆழிக்குமரன் ஆனந்தனின் வாழ்க்கை வரலாறும் அவற்றுடன் தொடர்புடைய ஆவணத்தொகுப்பும் எமது இணையத்தளத்தில் விரைவில் பிரசுரிக்கவுள்ளோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.