உயிர்வரை இனித்தாய் இயக்குநருக்கு டென்மார்க் தமிழ்ச் சங்கம் பராட்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2014 (திங்கட்கிழமை)
தற்போது டென்மார்க்கில் இரண்டாவது வாரமாக காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் இயக்குநர் கே.எஸ்.துரைக்கு டென்மார்க் தமிழ் சங்கம் ஆஸ்கார் சின்னம் வழங்கி பாராட்டியுள்ளது.
நேற்று முன்தினம் 05.04.2013 சனிக்கிழமையன்று டென்மார்க் பிலுண்ட் நகரில் இடம் பெற்ற தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் இந்தப்பாராட்டு வைபவம் இடம் பெற்றது.
இலங்கைத் தமிழ் மக்களுக்கான திரைப்பட முயற்சியில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் தரும் ஓர் இலக்கை எட்டித் தொட்டமைக்காக இந்தப் பாராட்டு வழங்கப்பெற்றது.
வெற்றிச் சின்னத்தை வழங்கி உரையாற்றிய தர்மா தர்மகுலசிங்கம் ஆசிரியர் கி.செல்லத்துரை திரைப்படம் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர் என்று குறிப்பிட்டார்.
பரிசை ஏற்றுப் பேசிய ஆசிரியர், தான் திரைப்பட முயற்சியில் ஈடுபடக் காரணம் அடுத்து வரும் தலைமுறை சிரமமின்றி நடைபயில ஒரு பாதையை போட வேண்டுமென்ற அவாவே காரணமென்றார்.
அன்று பொருளாதாரம், தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல், அரசியல் போன்ற காரணிகள் நமது திரைப்படத்தை வளர்த்தெடுக்க உறுதுணையாக அமையவில்லை.
இருப்பினும் வல்வை சிவசுப்பிரமணியம் போன்றவர்கள் சத்தபணக போன்ற சிங்களத் திரைப்படங்களின் தயாரிப்பாளராக இருந்துள்ளார்.
இலங்கைத் திரைப்பட முன்னோடிகளின் கனவை மெய்ப்பட வைக்க வேண்டிய பாரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
திரை நட்சத்திரம் இல்லாத இனம் முழுமை பெற்ற இனக்கூறாக இருக்க முடியாது, அதை நமக்காக வேறு யாரும் உருவாக்க மாட்டார்கள், உருவாக்க வேண்டியது நமது கடமை.
பணமோ, புகழோ நோக்கமல்ல நமது மக்களுக்கான வர்த்தக சினிமா உருவாக்கப்பட வேண்டும் என்ற இலட்சியத்துடனேயே பாடுபடுவதாகக் கூறிய அவர் உயிர்வரை இனித்தாய் திரைப்படத்திற்கு மக்கள் தரும் ஆதரவு தமது கனவுகளை மெய்ப்பிக்க வைத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தனியே இது தமது கடமை மட்டுமல்ல என்று தெரிவித்த அவர் ஒவ்வொரு மக்களுக்கும் இதில் பாரிய பொறுப்பிருக்கிறது என்றார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Jayaseelan (United Kingdom)
Posted Date: February 02, 2020 at 13:44
வாழ்த்துகள் தமிழகத்தில் இருந்து நன்றி ஜெயசீலன்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.