பரு பிரதேச செயலக விளையாட்டு, வல்வை வி.க ரசிகரன் சிறந்த தடகள வீரராகத்தெரிவு, சென்.தோமஸ் முதலிடம் (முழுப் படத்தொகுப்பும் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2014 (திங்கட்கிழமை)
இந்த வருடத்திற்கான பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுவின் இறுதிப் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் நேற்று பருத்தித்துறை ஹாட்லிக் கல்லுரரி மைதானத்தில் இடம் பெற்றிருந்தது.
பிற்பகல் சுமார் 0130 மணியளவில் பருத்தித்துறை பிரதேச செயலர் திரு ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பருத்தித்துறை நகரசபைத் தலைவர் திரு.சபா.ரவீந்திரன் அவர்களும், பருத்தித்துறை பிரதேச எதிர்கட்சி தலைவர் திரு.ஸ்ரீரங்க்கேஸ்வரன் அவர்களும், கெளரவ விருந்தினராக யாழ் மாவட்ட விளையாட்டு அதிகாரி திரு.மோகன்ராஜ் மற்றும் திரு.ஹாட்லிக் கல்லூரி அதிபர் திரு.தெய்வேந்திரராசா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
பருத்தித்துறை சென்.தோமஸ் முதலிடம்
சகல போட்டிகளிலும் புள்ளிகளின் அடிப்படையில் பருத்தித்துறை சென் தோமஸ் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. இதில் பருத்தித்துறை சென் தோமஸ் பெண்கள் அணியினரின் பங்களிப்பு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
உதைபந்து - தண்ட உதையில் திக்கம் அணி வல்வையை வெற்றி
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களிரற்கிடையிலான உதைப்பந்துப் போட்டியின் இறுதிப் போட்டியும் நேற்று இடம்பெற்றிருந்தது. இதில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து திக்கம் விளையாட்டுக் கழகம் மோதியது. போட்டியுன் முடிவில் இரு அணிகளும் சம நிலையில் இருந்ததை அடுத்து தண்டஉதை வழங்கபட்டிருந்தது. தண்டஉதையில் வல்வையை வெற்றிகொண்டு கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
சிறந்த தடகள வீரராக வல்வை வி.க ரசிகரன் தெரிவு
இந்த வருடத்திற்கான சிறந்த தடகள வீரராக வல்வை விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த செல்வன் ரசிகரன் தெரிவு செய்யப்பட்டார்.
வீர்களிற்கு விருது, வல்வை வி.க ஜிவிந்தன் உயரம் பாய்தலில் அதிஉயர் புள்ளிகளைச் சமன் செய்ததற்காக விருது பெற்றார்
நிகழ்வின் இறுதியில் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் உயரம் பாய்தலில் இதுவரை இருந்த வந்த அதிஉயர் புள்ளியை சமன் செய்த தற்காக வல்வை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த செல்வன் ஜிவிந்தன் விருதினைப் பெற்றுக்கொண்டார். மேலும் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இருந்து விளையாட்டுப் போட்டிகளில் தேசிய மட்டத்திற்குத் தெரிவான வீரர்களிற்கும் விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Mayooran (Sri Lanka)
Posted Date: April 07, 2014 at 16:39
We are Athletics kings of Vadamaradcy.
karan (srilanka)
Posted Date: April 07, 2014 at 14:51
well done valvai
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.