Blues pleasure boat service என பெயரிடப்பட்டுள்ள வல்வையில் உள்ள உல்லாசப் படகு தனது கன்னிச் சேவையை நேற்று வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது. வல்வையைச் சேர்ந்த கனடா வாழ் தம்பதியினர் இந்த முதலாவது பயணத்தில் ஈடுபட்டிருந்தனர்.
9 மணியிலிருந்து 10 மணிவரை சுமார் 1 மணி நேரம் வரை இந்த பயணம் வல்வெட்டித்துறை - தொண்டைமனாறு - வல்வெட்டித்துறை வரை இடம்பெற்றிருந்தது. பயணிகள் கரையோர மற்றும் கடல் காட்சிகளை புகைப்படங்கள் எடுப்பதற்கு ஏற்ற வகையில் படகு சின்னமலை, தொண்டைமனாறு போன்ற பகுதிகளில் சிறு நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
உல்லாசப் படகின் வேகம் சுமார் 10 கடல் மைல்கள் என அளவிடப்பட்டுள்ளது. இன்றைய பயணத்தில் பிரயாணிகளிற்கு உயிர் காப்பு அங்கி (Life Vest), மற்றும் உயிர் காக்கும் (Life Buoy) மிதவை என்பன வழங்க்கப்பட்டிருந்தன.
பயணம் மிகவும் பாதுகாப்பானதாகவும், மிகவும் குதூகலிக்கக் கூடியதாகவும் இருந்ததை நேரடியாக அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.
காணொளி விரைவில் இணைக்கப்படும்
இரட்டைப் படகு வகை - பொதுவாக வெளிநாடுகளிலேயே காணப்படுபவை
முற்பக்கம்
பிற்பக்கம்
படகின் ஒரு ஓட்டுனர் (ஒட்டி) - வேறு ஒரு படகில் புகைப்படம் மற்றும் காணொளிகள் எடுப்பதற்காக
கடற் காட்சி - தொண்டைமனாறு புதிய பாலம், பாரிய தண்ணீர்த் தொட்டி
பாய் (Sail) மூலமும் இயங்கக் கூடிய வகையில்
கடற்காட்சி
Blues boat - உட்பகுதி
Blues boat - உட்பகுதி (Floor)
அதிஷ்ட தம்பதியினர் - முதலாவது பயணத்தில்
15 குதிரைவலு வெளியிணைப்பு இயந்திரம்
இன்னுமொரு ஓட்டுனர்
பிரதான ஒட்டி, மிதவையுடன்
Hull, External
மேல்புறம்
உட்புறத்திலிருந்து சில காட்சிகள்
மிகவும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள நங்கூரம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.