யாழ் பருத்தித்துறை கடற்பரப்பில் அண்மையில் கரை ஒதுங்கியிருந்த மூங்கில் படகை அப்பிரதேச மக்கள், உல்லாசப் பிரயாணிகளின் பாவனைக்கேற்றவாறு மாற்றியமைத்துள்ளனர். பருத்தித்துறை இறங்குதுறைக்கு அண்மையாக, மெதடிஸ் பெண்கள் பாடசாலைக்கு முன்பாக, கடல் அலையின் தாக்கங்கள் சற்றுக் குறைந்த பிரதான நிலப்பரப்பிற்கும் முருகைக்கற்கள் (வட்டி) அமைந்துள்ள பகுதிக்கும் இடையில் தற்பொழுது மூங்கில் படகு நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படகை அழகூட்டும் வண்ணம், வண்ண நிற மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் படகின் உட்பகுதியும் சீராக்கப்பட்டுள்ளது.
படகிற்குள் இருக்கும் பொழுது, உட்பகுதி குளிர்ச்சியாகவுள்ளத்தை உணரக்கூடியதாகவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.