வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று காலை இடம்பெற்றுள்ளது. காலை 6 மணியளவில் நடேசர் சுவாமிக்குரிய பூஜைகளைத் தொடர்ந்து நடேசர் உலா இடம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கொடிதம்பப் பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜைகளைத் தொடர்ந்து, 0830 மணியளவில் சுவாமி ஊரணி தீர்த்தக் கடற்கரை நோக்கி புறப்பட்டிருந்தார். சுமார் 0930 மணியளவில் ஆரம்பித்திருந்த சமுத்திர தீர்த்த நிகழ்வுகள் முற்பகல் 11 மணிவரை நீடித்திருந்தது.
தீர்த்தம் ஆடிய பின் சுவாமி சுமார் 1130 மணியளவில் நெடியம்பதி திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவில் வந்தடைந்தார். பிள்ளையார் கோவிலில் அடியார்களிற்கு அன்னதானம் வழங்கப்பட்டிருந்தது.
இன்றைய உற்சவத்தில் வழமையைவிட சற்று அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று இரவு 7 மணியளவில் சுவாமி தனது ஆலயம் நோக்கி திரும்பவுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.