வல்வை சிவன் கோவில் பிச்சாண்டி திருவிழா நேற்று நிறைவு, இன்று தேர் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2014 (சனிக்கிழமை)
நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 14 ஆம் நாளான பிச்சாண்டி ஊர்வலம் இடம்பெற்றிருந்தது. நேற்று முன்தினம் இடம்பெற்ற பார்வதி - சிவபிரான் திருக்கல்யாண நிகழ்வின் தொடர்ச்சியான இப்பிச்சாண்டி நிகழ்விற்காக, பிச்சாண்டி நேற்று மாலை 5 மணியளவில் நெடியம்பதி திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயம் நோக்கி சென்றிருந்தார்.
கீழே படங்களில் 14 ஆம் நாள் பகல் திருவிழா காட்சிகளையும், மாலை பிச்சாண்டி வல்வை நெடியம்பதி நோக்கிச் செல்வதையும் மற்றும் இரவுத் திருவிழா காட்சிகளையும் காணலாம்.
பிச்சாண்டி ஊர்வலத்தின் பொழுது சிவன் நெடியம்பதி திருச்சிற்றம்பல ஆலயத்திலிருந்து திரும்புகையில் வழமைக்கு மாறாக சிவபுர வீதியினூடாக (பருத்தித்துறை- காங்கேசன்துறை வீதிக்கு சமாந்தரமாக உள்ள வீதி) ஆலயத்திற்கு வருவது குறிப்பிடத்தக்கது.
அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வரும் வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா இன்று முற்பகல் நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.