தொண்டைமானாறு ஒற்றுமை வி.க 55வது ஆண்டு நிறைவு உதைபந்துப் போட்டிகள் ஆரம்பமாகின (விபரங்கள், படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 14/03/2014 (வெள்ளிக்கிழமை)
தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் தனது 55ஆவது ஆண்டு நிறைவையொட்டியும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டும், தொண்டைமானாறு விநாயகர் சனசமுகநிலையம் மற்றும் விநாயகர் மின்னமைப்பாளர்களுடன் இணைந்து, வர்ணம் TV மற்றும் வர்ணம் TV அனுசரனையுடன் மாபெரும் விளையாட்டுப்போட்டிகளை நடாத்துகின்றார்கள்.
இதன் ஆரம்பகட்டமாக நேற்று முன்தினம் 12.03.14 அன்று, பருத்தித்துறை லிக்கினில் பதிவு செய்யப்பட்டுள்ள கழகங்களிற்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டிகள் வெகுவிமைரிசையாக ஆரம்பித்துள்ளன.
தொண்டைமானாறு கலைவாணி விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் சுமார் 4 மணியளவில் மங்கள விளக்கேற்றல் மற்றும் கொடியேற்றங்களுடன் நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
ஆரம்ப நிகழ்வுகளிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீ செல்வச்சந்நிதியாலய பிரதமகுருக்கள் சி.செல்வமணி ஐயர், சி.செல்வகணேஸ் ஐயர், பருத்தித்துறை உதைபந்தாட்ட லிக்கினுடைய தலைவர் திரு.க.நவநீதமணி உபதலைவர் க.சதீஸ், தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழக உபதலைவர் அ.மணிவண்னன், தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழக செயலாளர் இ.சுரேஸ்குமார், தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழக பொருளாளர். - ம.தர்சாந், சமாதான நீதவான். - க.அரியராசா மற்றும் ஒற்றுமை விளையாட்டுக்கழக மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதுவரை நடந்த போட்டிகளும் முடிவுகளும்
12.03.14
1வது போட்டி- இமையாணன் இளைஞர் வி.க எதிர் சமரபாகு நியூட்டன் வி.க 4:1
2வது போட்டி- பலாலி விண்மீன் எதிர் கம்பர்மலை யங்கமன்ஸ் - 2 : 0
4வது போட்டி - அல்வாய் பாரதி (B) எதிர் உடுப்பிட்டியுத்(B) 5-4
உதைபந்தாட்டத்துடன் துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், சைக்கிளோட்டம் (ஆண், பெண்), மரதன் ஓட்டம் (ஆண், பெண்) மற்றும் பல பாரம்பரிய விளையாட்டுக்களையும் நடாத்தவுள்ளதாகவும், குறித்த விளையாட்டுக்களில் கலந்துகொள்ள விரும்பும் வீரர்கள் மற்றும் கழகங்கள் தமது விளையாட்டுத்துறை பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளமுடியும் எனவும் அறிவித்துள்ளனர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.