சிறப்பாக நடைபெற்ற வல்வை சிவன் கோவில் திருக்கல்யாணத் திருவிழா (பகல் மற்றும் இரவுத் திருவிழா படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2014 (வியாழக்கிழமை)
நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 11 ஆம் நாளான நேற்று திருக்கல்யாணத் திருவிழா நண்பகலில் இருந்து இரவு வரை சிறப்பாக்க நடைபெற்றது.
வல்வை சிவன் தேவஸ்தானத்தில் நேற்று காலை திருக்கல்யாண நிகழ்வாக சாமவர்த்தனமும் அதன் தொடர்ச்சியாக மாலை தட்டெடுக்கும் நிகழ்வோடு ஆரம்பித்து, சிவன்-பார்வதி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. பரமேஸ்வரன் - பார்வதி, அலங்கரிக்கபட்ட பூந்தண்டிகையில் வீதியுலா வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்திருனந்தனர்
சிறப்பு நிகழ்வாக வழக்கம்பரை சிவகுமார் குழுவினரின் தவில்-நாதஸ்வர கச்சேரியும் இடம் பெற்றிருந்தது. நிகழ்வுகள் இரவு 11 மணிவரை நீடித்திருந்தது. இரவு திருக் கல்யாணத் திருவிழாவிற்கு வழமையைவிட அதிகளவிலான பகதர்கள் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை நடைபெற்ற திருக் கல்யாணத் திருவிழாவின் காட்சிகள்
அம்பாள் தவக்கோலம்
அம்பாள் தவம் செய்ய எழுந்தருழுதல்
இல்லற வாழ்க்கை நோக்கிய பயணம்
கதை கூறுதல்
கிழப்பிராமணர் வேடம் சிவன்
சிவன் வாக்குறுதி கொடுத்தபின் அம்மை
தவமிருக்கும் தேவியை வேடம் பூண்டு பார்க்க வருதல்
திருமணம் மாலை நடைபெறுவதாக உறுதி கூறி செல்லல்
பாட்டு பாடி பொருள் கூறுதல்
பிராமண வேடத்தை கலைத்து இடபாரூடாராக தேவிக்கு
பெருமான் இல்லற வாழ்க்கையில் ஈடுபட காசி நோக்கி பயணம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.