பலாலி விண்மீன் வல்வை உதைபந்து 2014 கிண்ணத்தை வெற்றி கொண்டது, இறுதிப் போட்டிக்கு மைதானம் நிறைந்த ரசிகர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2014 (திங்கட்கிழமை)
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் WELWISH MEDICAL CENTER அனுசரணையுடன் வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்திய அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையேயான விலகல் முறையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதியாட்டமும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று நடைபெற்றது.
ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் மாலை சுமார் நான்கு மணியளவில் வல்வை விளையாட்டுக் கழக தலைவர் K.முரளி தலைமையில் நடைபெற்ற இவ் இறுதிப்போட்டிக்கு பிரதம விருந்தினராக S. சிவநேசன் (முன்னாள் வல்வை புளூஸ் வீரர் ), கௌரவ விருந்தினர்களாக D. வேதாபரணம் (பரு.உதைபந்தாட்ட லீக் தலைவர் ), S. சர்வானந்தன் ( மக்கள் வங்கி முகாமையாளர் வல்வெட்டித்துறை), K.தேவசிகாமணி ( முன்னாள் வல்வை புளூஸ் வீரர் ), சிறப்பு விருந்தினர்களாக S.ஸ்ரீபதி (தலைவர்-சிதம்பரா கல்லூரி பழைய மாணவர் சங்கம்), K.பாலசிங்கம் (முன்னாள் தடகள வீரர் ) ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மூன்றாம் இடத்திற்கான தெரிவு போட்டி
போட்டிகளின் வரிசையில் முதலாவதாக மூன்றாம் இடத்திற்கான போட்டியில் வதிரி பொம்மேர்ஸ் வி.கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கன்பன்ஸ் வி.கழகம் மோதியது. இப் போட்டியில் 3:0 எனற கோல் கணக்கில் வெற்றி பெற்று வதிரி பொம்மேர்ஸ் வி.கழகம் சுற்றுத் தொடரின் 3 ஆம் இடத்தைக் கைப்பற்றியது.
இறுதிப் போட்டி :-
இறுதிப் போட்டியில் பலாலி விண்மீன் வி.கழகம் எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் வி.கழகம் மோதியது. சுற்றுத் தொடரின் வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பெற்றுவதற்காக நடைபெற்ற இந்த விறு விறுப்பான ஆட்டத்தில் பலாலி விண்மீன் 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தை தனதாக்கியது.
இறுதிப் போட்டியைத் தொடர்ந்து பரிசில்கள் வழங்கப்பட்டன.
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் இவ் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது கடந்த 05.02.2014 அன்று ஆரம்பமாகி தொடர்ச்சியாக வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றுவந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.