வல்வை சிவன் கோவில் 6 ஆம் திருவிழா நிறைவு, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2014 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை வாலம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 6 ஆம் நாள் நிகழ்வுகளின் இரவுத் திருவிழா, இரவு 08:30 மணியளவில் நிறைவெய்தியுள்ளது.
முருகப் பெருமானின் இறுதி வீதி உலா நேற்றாகும். நேற்றைய இரவு உற்சவத்தில் முருகப் பெருமான் மயில் வாகனத்தில் வீதி உலா வந்திருந்தார்.
நேற்றைய காலை உற்சவத்தின் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டிருந்தது. அன்னதானம் தொடர்ந்து வழங்கப்படும் என ஏற்பாட்டாளார்கள் தெரிவித்துள்ளனர்.
கீழே படங்களில் சுவாமி வெளி வீதி உலா வருவதனையும் உற்சவத்தின் பூரண காட்சிகளான சுவாமி, வீதி உலா, நிறைகுடம், பஜனை, தவில் மற்றும் நாதஸ்வரம், பக்தர்கள், சகடை என சகலதும் காட்டப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.