வடமராட்சி முகாமைத்துவ மாணவர்களின் ஒன்றுகூடல் மற்றும் பிரியாவிடை நிகழ்வு இன்று வல்வையில் இடம்பெற்றது, 70 மாணவர்கள் பங்கேற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2014 (சனிக்கிழமை)
யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ மாணவர்களின் ஒன்றுகூடல் மற்றும் பிரியாவிடை நிகழ்வு இன்று வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது. வல்வை வேம்படிப் பகுதியில் அமைந்துள்ள யோகநாயகி கல்விக் கூடத்தில் சுமார் 1130 மணியளவில், முகாமைத்துவ கற்கைநெறியை முடித்து வெளியேறியுள்ள வடமராட்சியைச் சேர்ந்த 9 மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வுகள் ஆரம்பித்திருந்தன. சகல வருடங்களையும் சேர்ந்த சுமார் 70 முகாமைத்துவ மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.
நிகழ்வுகளை, இவ்வருடம் முகாமைத்துவ கற்கை நெறிகளை முடித்துள்ள செல்வன்.த.சிவஞானம் ஆரம்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, வல்வை யோகநாயகி கல்விக் கூட ஸ்தாபகர் பேராசிரியர் ச.இராஜேந்திரன் மற்றும் கற்கைநெறியை முடித்து வெளியேறியுள்ள வடமராட்சியைச் சேர்ந்த 9 மாணவர்களின் பேச்சுக்கள் இடம்பெற்றன.
மாணவர்களின் ஆக்கங்களைத் தொடந்து 9 மாணவர்களுக்குமான கேடயங்கள் வழங்கப்பட்டன. குறிப்பிட்ட 9 மாணவர்களில் செல்வன் கேதீஸ்வரன் மற்றும் செல்வி கிருபாலினி ஆகிய இருவர் வல்வைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
கடந்த 2 வருடங்களில் இடம் பெற்றிருந்த இவ்வாறன ஒன்றுகூடல் மற்றும் பிரியாவிடை நிகழ்வுகள் பருத்தித்துறை மற்றும் நெல்லியடிப் பிரதேசங்களில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேநீர் விருந்துபசாரத்தைத் தொடர்ந்து நிகழ்வு பிற்பகல் 0330 நிறைவுற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.