வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மாரி தேவி உற்சவம் இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2014 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று மாரி தேவி உற்சவம் நடைபெற்றது. பிற்பகல் சுமார் 5 மணியளவில் சிறப்புப் பூஜைகளுடன் ஆரம்பித்த நிகழ்வு சுவாமி வீதி உலாவுடன் சுமார் 8 மணியளவில் நிறைவெய்தியது ஸ்ரீ முத்துமாரியம்மன், வல்வை வைத்தீஸ்வரருக்கு முன்னரே அமையப் பெற்றதை அடிப்படையாகக் கொண்டு, மாரிதேவி உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்வில், வல்வை சிவன் கோயில் குருக்களினால் மூலஸ்தான அம்மன் மற்றும் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் அம்மனுக்கு உற்சவம் நடாத்தப்பட்ட பின்னர் எழுந்தருளி அம்மன் வீதி உலா வருவது வழமையாகும்.
வல்வை வைத்தீஸ்வரர் ஆலயத்தில் இடம்பெறவுள்ள வருடாந்த கொடியேற்ற உற்சவத்திற்கு முன்னராக, ஒரு நாள் நிகழ்வாக இந்த உற்சவம் நடைபெறுவது வழமை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.