வடபகுதியின் முதலாவது உல்லாசப் படகு வல்வையில் இன்று வெள்ளோட்டம் விடப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 21/02/2014 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டிதுறையில் இன்று உல்லாச இரட்டைப் படகு ஒன்று வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. உல்லாசப் படகுச் சேவைக்கென (Boating) இப்படக்கானது வல்வையைச் சேர்ந்த நோர்வையைப் பிறப்பிடமாகக் கொண்ட நலன்விரும்பி ஒருவரின் முயற்சியால், யாழ்பாணம் காரைநகரைச் சேர்ந்த படகு கட்டுனர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வல்வை மீன் சந்தைக்கு அருகில் உள்ள பட்டறை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த இந்த இரட்டைப் படகு இன்று காலை வல்வெட்டித்துறைப் பகுதியில் அமைந்துள்ள கொத்தியால் கடற்கரைக்கு சுபகாரியங்கள் மற்றும் வெள்ளோட்டத்திற்காக எடுத்து வரப்பட்டிருந்தது.
சுமார் 1030 மணியளவில் பொங்கல் உட்பட்ட சுப காரியங்களின் பின்னர், படகு கொத்தியால் கடற்கரையில் சுமார் 1200 மணியளவில் வெள்ளோட்டம் விடப்பட்டிருந்தது.
15 புதிய குதிரை வலு வெளி இணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ள இந்தப் படகில் சுமார் 15 பேர் வரை சுமார் 1 மணி நேரம் பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த படகானது படகுகளைக் கையாளக்கூடிய வான் பகுதியக் கொண்ட வல்வையின் ஒரு கடற்கரைப் பகுதியான கொத்தியால் கடற்கரைப் பகுதியிலும், தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் போது தொண்டைமானாறு நீரேரிப் பகுதியிலும் இயக்கப்படவுள்ளது.
குறித்த படகின் மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி வல்வை விளையாட்டுக் கழகத்திற்கும், ஊரணி வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபைக்கும், யோகநாயகி கல்வி நிலையத்திற்கும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
படகின் தரவுகள் (Specifications) மற்றும் தொடர்பு இலக்கங்கள் வல்வெட்டித்துறை.org யில் பின்னர் பிரசுரமாகும்.
பட்டறையிலிருந்து படகு சுபகாரியங்களுக்காக எடுத்து செல்லப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.