வல்வெட்டித்துறையில் உள்ள இந்துக்கோவில்களைப்போல மிகப் பழைமையும் சிறப்பும் வாய்ந்த சென் செபஸ்தியர் ஆலய வருடாந்தத் திருவிழா இம்மாதம் 11ந் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி 20 ஆம் திகதி திங்கட்கிழமை இனிதே நிறைவு பெற்றுள்ளது.
சென் செபஸ்தியருக்கென மிக முக்கியமான ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் 19 ஆம் திகதி இரவு நற்கருணை அராதனை வெகு சிறப்பாக நடைபெற்றது. நேற்று 20 ஆம் திகதி காலை திருப்பலியைத் தொடர்ந்து திருச்சுருப சுற்றுப்பிரகாரமும் ஆலயத்தைச் சுற்றிவந்தமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
இந்த வருடத் திருவிழாவுக்கு இத்தாலி நாட்டில் வசிக்கும் அருட்தந்தை திரு.பெர்னாட் (Bernard) அடிகளார் வந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. பெர்னாட் (Bernard) அடிகளார் அவர்கள் தலைமையில் இம்முறை கூட்டுத்திருப்பலி வெகு விமரிசையாக நடைபெற்றதாகவும், ஆலயப் பங்குத் தந்தை அருட்திரு நிரூபன் அவர்களின் தலைமையில் தேவாலய வழிபாடுகள் யாவும் மிகச் சிறப்பாக நடந்துள்ளதாகவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
வல்வை மக்களின் நிதி உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பு
விழாவின் இறுதியில்,தேவாலயத் திருப்பணி வேலைகளுக்கு பெரும் நிதி உதவிகளைச் செய்த அனைத்து வல்வை மக்கள், குறிப்பாக வெளிநாட்டு வல்வை நலன்புரிச் சங்கங்கள், மற்றும் வல்வை ஓன்றியம் என அனைவருக்கும் தேவாலயப் பங்குத் தந்தை அருட்திரு நிமலன் அவர்கள் தமது நன்றியினைத் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.