வல்லை வெளியில் தைத்திருநாளை முன்னிட்டு உயரமான படலங்கள் ஏற்றும் போட்டி நேற்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2014 (புதன்கிழமை)
வடமராட்சியையும் வலிகாமத்தையும் இணைக்கும் வல்லை வெளியில் தைத்திருநாளை முன்னிட்டு நேற்று காலை உயரமான படலங்கள் ஏற்றும் போட்டி நடைபெற்றது. ஆனாலும் காற்றின் வேகம் போதாமையால் படலங்களை வானில் பறக்க விடப்பட்டபொழுது அவற்றால் அதிக தூரம் செல்லமுடிந்திருக்கவில்லை.
ஆனாலும் போட்டியானது பருத்தித்துறை – யாழ்பாண முக்கிய நெடுஞ்சாலையில் இடம்பெற்றிருந்ததால், போட்டியானது அதிகளவு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.