வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தால் இன்று நடாத்தப்பட்டிருந்த மாபெரும் பட்டப்போட்டியில் பதிவு செய்யப்பட்டிருந்த 59 பட்டங்களில் 43 வேறு வேறு விதமான வண்ணப் பட்டங்கள் போட்டியில் கலந்து வானை அலங்கரித்திருந்தன. ஆயிரக்கணக்கில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்து போட்டியைப் பார்க்க வந்திருந்த மக்கள் கூட்டத்தால் உதயசூரியன் கடற்கரை நிரம்பியிருந்தது.
இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் ஆரம்பமாகியிருந்த இந்தப் பட்டப் போட்டியில் பெரும்பாலும் கடதாசியினால் செய்யப்பட்டிருந்த மரபு முறையான பட்டங்களும், குறிப்பிடக்கூடிய சில நவீன முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த பட்டங்களும் போட்டியில் பங்கெடுத்திருந்தன.
போட்டியில் பங்கெடுத்திருந்த பட்டங்களும், பரிசு பெற்ற விபரங்களும் வருமாறு.
விசித்திர நட்சத்திர கூட்டம், விண்வெளி ஓடம், தட்டி வான், படகோட்டி, பெட்டிகளின் ராஜா, vvt Transformer, இறால், நட்சத்திரம், நட்சத்திர கூண்டு, வௌவால் பெட்டி, இருதலை ருத்ரநாகம், காக்கா வௌவால், காக்கா வௌவால், மூன்று முக்கோணம், விண்வெளிக்கலம் (Rocket), ஆகாயவிமானம், நட்சத்திரக்கூடு, அதிசயக் கடற்கன்னி, வால் நட்சத்திரம், பெட்டிப்பட்டம், ஐந்துதலை நாகம், பிராந்து, பச்சைக் கிளி, இதயம் கொண்ட கப்பல், பாரந்து ஆகியவை முதல் 25 இடங்களை பெற்ற பட்டங்கள்.
மூன்று மூலை, சூரியப் பொங்கல், காக்கா வௌவால், கோகுலன், கட்டுக் கொடி, பாரத்தை மற்றும் விண்வெளிக்கலம் (Rocket) ஆகியன ஆறுதல் பரிசிப் பெற்றன.
வல்வெட்டித்துறை மாதவடியைச் சேர்ந்த நவரத்தினம் என்பவருக்கு அதிகூடிய வயதில் பட்டம் ஏற்றியதற்காக
சிறப்புப் பரிசு வழங்கப்படிருந்தது
2.00 மணியிலிருந்து 6.00 மணி வரை நடைபெற்ற பட்டப் போட்டியைக் காண பிற இடங்களிலும் இருந்து சுமார் 8000 மேற்பட்ட பார்வையாளர்கள் மக்கள் வந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் ஆகும்.
இந்த பட்டப் போட்டிக்காக ஏற்கனவே 59 பட்டங்கள் வரை பதிவு செய்த போதிலும் இன்று வானில் 43 பட்டங்களே ஏற்றப்பட்டிருந்தன.
வல்வை குழவிகள் கலாமன்றத்தினால் vvt Transformer, தட்டிவான், இறால், விண்வெளி ஓடம், நட்சத்திரக்
கூண்டு மற்றும் நாகபாம்பு உள்ளடங்கலாக விசித்திரமான 9 பட்டங்கள் போட்டியில் கலந்து கொண்டிருந்தமை இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
உலகுடைய பிள்ளையார் இளைஞர்களின் உருவாக்கத்தில் படகோட்டி, கடற்கன்னி, நட்சத்திரக்கூடு போன்றவை போட்டியில் கலந்து கொண்டிருந்தன.
ஏராளமான பார்வையாளர்களின் வருகையால் சிவகுரு வித்தியாசாலை வீதி, உதயசூரியன் கடற்கரை வீதி, திரு.சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்திலிருந்து அம்மன் கோவில் வீதி வரையான கேகேஎஸ் வீதி, மற்றும் அழுக்கடை வீதி ஆகிய இடங்கள் வாகனங்கள், துவிச்சக்கர வண்டி கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றினால் நிரம்பியிருந்தன.
அத்துடன் குறித்த பகுதி சிறிது நேரம் அம்மன் கோவிலின் இந்திரவிழா போல் காட்சியளித்ததும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
S.Mathu (srilanka)
Posted Date: January 17, 2014 at 04:41
நிகழ்வு பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது, ஆனால் போட்டி முடிவுகள் மிகவும் கவலைக்குரியதாக இருந்தது (தவறான முடிவுகள் என அனைவராலும் விசனம் தெரிவிக்கப்பட்டது), போட்டிக்கான விதிமுறைகளையும், புளிளியிடும் திட்டத்தையும் முன்னரே அறிவித்தால் நன்றாக இருக்கும்
Video Ravi & Family (Canada)
Posted Date: January 16, 2014 at 12:41
Fantastic pics, we feel like we were there at VVT, keep up your good job.
karan (srilanka)
Posted Date: January 16, 2014 at 03:03
thanks valvettithurai.org web team
uthayan (srilanka)
Posted Date: January 16, 2014 at 02:58
good job valvettithurai.org team
capt s.sivanesan (srilanka)
Posted Date: January 15, 2014 at 18:54
I really appreciate the annual Kites flying competition very well organised by the Vigneswara community centre,and their fine efforts. All people enjoyed the event.
My congratulations for the participants for their creativity,calculated talents and endeavour
All praise for valvettithurai.org for bringing to view this colourful exhibition and show worldwide.
S.Sivanesan
சசி (Canada)
Posted Date: January 15, 2014 at 15:45
உடன் தகவல்களுக்கு நன்றி
Suvathy (Uk)
Posted Date: January 15, 2014 at 11:52
Nice to see these photos,
thank you.
Mamachi (uk)
Posted Date: January 15, 2014 at 10:23
God job
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.