சர்சைகளின் மத்தியில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற வரவு செலவு திட்டம் நிறைவேற்றம், 5 உறுப்பினர்கள் பிரசன்னமாக முடியவில்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 27/12/2013 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் வரவு செலவு திட்டத்தின் வாக்கெடுப்புக்கு இன்று காலை விடப்பட்ட பொழுது 5 உறுப்பினர்களின் பிரசன்னம் இல்லாத போதும் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவு திட்ட அமர்விற்காக வல்வை நகராட்சி மன்றத்தின் உறுப்பினர்கள் நகராட்சி மன்றத்திற்கு சென்ற போது குறிப்பிட்ட பொதுமக்கள் சிலர் 5 உறுப்பினர்களை நகராட்சி மன்றத்திற்கு உள்ளே நுழையவிடாது ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தின் பொழுது மேற்குறிப்பிட்டுள்ள 5 உறுப்பினர்களையும் கட்சியின் முடிவிற்கமைய செயற்படுமாறும், வல்வை நகராட்சி மன்றத்தின் வரவு செலவு திட்டத்தினை இரு முறை தோற்கடித்தமை தொடர்பில் தமது எதிர்ப்புக்களையும் தெரிவித்திருந்தனர்.
இவ்விடயமறிந்து அவ்விடத்திற்கு வருகை தந்திருந்த வல்வெட்டித்துறை பொலிஸ்சார் 5 உறுப்பினர்களையும் உள்ளே விடுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடாத்திய போதும் பேச்சு வார்த்தை பயனளிக்கவில்லை!
ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் நகராட்சி மன்றத்திற்கு உள்ளே வரவு செலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 உறுப்பினர்களின் பிரசன்னம்
இல்லாத நிலையில் வரவு, செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
இவ்வரவு செலவு திட்டமானது கடந்த இரண்டு முறையும் தோற்கடிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.