வல்வெட்டித்துறை செபஸ்தியார் ஆலயத்தில் கிறிஸ்மஸ்தின வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2013 (புதன்கிழமை)
இயேசு கிறிஸ்து இவ் மண்ணுலகில் அவதரித்த நன்நாளாம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வல்வெட்டித்துறை செபஸ்தியார் ஆலயத்தில் நேற்று இரவு 10.00 மணியளவில் சிறப்பு வழிபாடுகள் வல்வெட்டித்துறை பிரதேச பங்குத்தந்தை அருட்தந்தை திரு.நிரூபன் நிஷானந் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து மாந்தர்களின் மீட்பராய் இம் மண்ணுலகில் தொழுவம் தனில் அவதரித்த நாளை உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவ மக்கள் விசேட பூசை வழிபாடுகளுடன் கொண்டாடுவது வழக்கம்.
அந்தவகையில் நேற்றைய தினம் வல்வெட்டித்துறை செபஸ்தியார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளுக்கு வல்வெட்டித்துறைப் பிரதேசத்தின் அநேக கிறிஸ்தவ மக்கள் வருகை தந்திருந்ததோடு, இயேசு கிறிஸ்துவிடம் சமாதானமும் சுபீட்சமும் நிறைந்த வாழ்க்கைக்காக பிரார்த்தித்தனர்.
நத்தார் தினத்தை முன்னிட்டு நேற்று நாம் ஒரு சிறப்புக் கவிதையை பிரசுரித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை பிரதேச பங்கானது வல்வெட்டித்துறை செபஸ்தியார் ஆலயம், உடுப்பிட்டி இருதய நாதர் ஆலயம், பொலிகண்டி குழந்தை யேசு ஆலயம் மற்றும் சக்கோட்டை தேவாலயத்தையும் உள்ளடக்கியதாகும். இங்கு பங்குத்தந்தையாக அருட்தந்தை திரு.நிரூபன் நிஷானந் அவர்கள் பணிபுரிகின்றார்.
வல்வெட்டித்துறை சென் செபஸ்தியார் ஆலயமானது தற்பொழுது புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.