வல்வை இளங்கதிர் இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் தர்மலிங்கம் ரஞ்சன் அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட 9 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் இன்று மாலை 15.30 மணியளவில் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டிக்கு முன்னர் சிநேகிதபூர்வமான் உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இளங்கதிர் A விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒவ்வொருகோல்களை பெற்று சமநிலையில் முடிவுற்றது.
அதனைத்தொடர்ந்து இன்றைய இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இளங்கதிர் B விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இப்போட்டியில் இரு அணிகளும் ஆட்டம் முடிவடையும் வரை கோல் எதனையும் பெறவில்லை. நடுவர்களினால் தண்ட உதை வழங்கப்பட்டது. தண்ட உதையில் சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று தர்மலிங்கம் ரஞ்சன் அவர்களின் ஞாபகார்த்த கிண்ணத்தைக் கைப்பற்றியது.
இந்த போட்டியில் ஆட்டநாயகனாக சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த செல்வன் நிரூபனும், சிறந்த கோல்காப்பாளராக இளங்கதிர் B விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த செல்வன் ஜெயராசாவும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.