வல்வையில் அமைந்துள்ள 7 ஆவது விஜயபாகு படையணியால் 19 வீடுகளும் 18 காணிகளும் மீளக்கையளிக்கப்பட்டுள்ளன
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2013 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை சந்தியில் இதுவரை அமைந்திருந்த இராணுவமுகாம் பகுதியில் உள்ள பொதுமக்களின் குடியிருப்புக்கள் மற்றும் காணிகள் நேற்று முன்தினம் பருத்தித்துறையில் வைத்துக்கையளிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறைச் சந்தியில் அமைந்திருந்த 7 ஆவது விஜயபாகு படையணியினரால் (7th VIR – Vijayabahu Infantry Regiment) 19 வீடுகளும், 18 காணித்துண்டுகளும் மீளளிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கையளிக்கும் நிகழ்வு பருத்தித்துறையில் நேற்று முன்தினம் காலை இடம் பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பருத்தித்துறை பிரிகேட் கொமாண்டர் கேணல் டிக்கிரி திஸாநாயக்காவினால் பருத்தித்துறை பிரதேசசெயலர் திரு.T.சத்தியசீலன் அவர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்தநிகழ்வில் பருத்தித்துறை இராணுவமுகாம் பகுதியில் அமைந்துள்ள 29 வீடுகளும் 3 காணிகளும் மற்றும் சக்கோட்டை மினிமுகாம் பகுதியில் அமைந்துள்ள 2 வீடுகளும் 1 காணியும் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.