கொழும்பு பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாதிச்சனி மற்றும் நவராத்திரி நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2013 (திங்கட்கிழமை)
புரட்டாதி மாதத்தில் வரும் சனிதோறும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் புரட்டாதிச் சனி வழிபாடு நேற்று முன்தினம் சகல சிவன் ஆலயங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டது.
படங்களில் கொழும்பின் கொட்டாஞ்சேனை பகுதியில் அமைந்துள்ள பொன்னம்பலவானேஸ்வரர் சிவன் கோவிலில் அடியார்கள் கறுப்பு எள்ளுப் பொட்டலம் கட்டி புரட்டாதிச் சனி வழிபாடு வழிபடுவதினைப் படங்களில் காணலாம்
மேலும் பொன்னம்பலவானேஸ்வரர் சிவன் கோவிலில் நவராத்திரி பூசையின் எட்டாம் நாளான நேற்றைய முன்தினம் கல்வியை வேண்டி சரஸ்வதிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. இதனையொட்டி அடியார்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபடுவதினைப் படங்களில் காணலாம்.
இது இவ்விதமிருக்க மேலும் நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று கொழும்பின் வெள்ளவத்தைப் பகுதியில் அமைந்துள்ள பெரும்பாலான அலுவலகங்கள் மற்றும் வியாபார ஸ்தலங்களில் நவராத்திரி பூஜை வழிபாடானது சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.