கடந்த ஒன்பது நாட்கள் இடம்பெற்று வந்த நவராத்திரி விழாவின் இறுதி நாளான இன்று மானம்பு நிகழ்வு வல்வை நெடியகாட்டுப் பிள்ளையார் கோவில் வீதியில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வையொட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் வல்வை ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் வல்வை நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்துக்குச் சென்று, அங்கு மானம்பு நிகழ்வு நடைபெற்றது.
ஏராளமான எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்ட இவ் நிகழ்வில் வன்னி மரத்துடன் கூடிய வாழை மரம் வெட்டப்படுவதைப்படுவதையும் வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் குதிரை வாகனத்தில் வாகனத்தில் வீற்று இருப்பதையும், வல்வை ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் குதிரை வாகனத்தில் வீற்று இருப்பதையும் படங்களில் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.