அளக்கடவை காளியம்மன் கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2013 (சனிக்கிழமை)
துர்க்கை, லக்ஸ்மி, சரஸ்வதி ஆகிய பெண் தெய்வங்களை வேண்டி தற்பொழுது இந்துக்களால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நவராத்திரி விழாவானது வல்வெட்டித்துறைப் பிரதேசத்திலும் தொடர்ந்தும் மிகவும் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.
வல்வெட்டித்துறை அளக்கடவை பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் நவராத்திரி பூசையின் ஆறாம் நாளான நேற்றைய முன்தினம் செல்வத்தை வேண்டி திருமகளுக்கு வழிபாடு நடைபெற்ற பூஜை நிகழ்வுகளைப் படங்களில் காணலாம்.
நவராத்திரி வழிபாடானது வல்வையில் வெகு சிறப்பாக கோவில்களிலும், பாடசாலை மற்றும் பொது இடங்களிலும் நடை பெறுவது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.