சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதியவகை வைரஸினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளனர்.
பன்றிக்காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய உயிர்கொல்லி வைரஸான H1N1 வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வைரஸுக்கு G4 EA H1N1 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டில் தொற்றுநோயை ஏற்படுத்திய H1N1 வைரஸின் மறுபணுத்தொடரை கொண்டுள்ள இந்த வைரஸால் உடனடி ஆபத்து இல்லை என்றாலும், வருங்காலத்தில் இது மனிதர்கள் மத்தியில் பரவுவதற்கான ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். "இந்த வைரஸ் மனிதர்களைப் பாதிக்க மிகவும் அவசியமான அனைத்து முக்கிய அடையாளங்களையும் கொண்டுள்ளது" என்று திங்களன்று வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில், சீனப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், சீனாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும் தெரிவித்துள்ளன.
இக்காய்ச்சல் கொரோனா வைரஸ் தொற்று போல உலகப் பெருந்தொற்றாக மாறும் அச்சுறுத்தல் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேற்கண்ட செய்தி பல்வேறு சர்வதேச ஊடங்களில் வெளியிடப் பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.