வல்வெட்டித்துறையில் இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்கு சொந்தமான 4 பரப்பளவு நிலம் கையளிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை பருத்தித்துறை பிரதான வீதியில் குடியேற்றத் திட்டப் பகுதியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபப் பகுதியே கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorumdam of understanding) அண்மையில் கைச்சாத்து இடப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு ரேவடிப் பகுதியில் சொந்தமாக இருந்த சுமார் 16 பரப்பளவுடைய நிலம் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் அமைப்பதற்காக இலங்கை சுங்கத் திணைக்களத்தால் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கீழே படங்களில் சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள புதிய நிலப்பகுதியை காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.