நீர்நிலைகளை ஆராய்ச்சி செய்து ஆவணப்படுத்தும் அலுவலகம் (Hydrographic Office) ஒன்று இலங்கையில் தலைநகர் கொழும்பின் மட்டக்குளிய பகுதியில் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதல் முறையாக அமையும் குறித்த இந்த Hydrographic Office தலைநகர் கொழும்பின் மட்டக்குளியப் பிரதேசத்தில் NARA அமைந்துள்ள பகுதியில் அமைகிறது.
இலங்கை கடற்படையின் Hydrographic Office சேவைப்பிரிவு NARA வுடன் (Aquatic Resources Research and Development Agency) சேர்ந்து இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கின்றது.
இந்த முயற்சியினால் இலங்கையைச் சூழவுள்ள (யாழ்குடா உட்பட) நீர் நிலைகளின் கடலியல் வரைபடங்கள் (nautical charts) வரைபடங்கள் மேலும் துல்லியமாகவும் சிறந்ததாகவும் வருவதற்கான வாய்ப்புக்கள் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.
உலகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளுக்கான கடலியல் வரைபடங்களை UK Hydrographic Office மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.