நெடியகாட்டு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்-(83 படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2014 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாட்டு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று காலை ஆரம்பமாகி ஏராளமான விநாயக அடியார்களுடன் மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
அதிகாலையிலேயே கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு காலை 9.30 மணியளவில் மூலஸ்தான கலசத்துக்கு அபிஷேகம் செய்யபட்டு தொடர்ந்து ஏனைய கலசங்களுக்கும் சமகாலத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து ஒவ்வொரு விக்கிரகங்களுக்குரிய யாக மண்டலங்களின் நடுவேயுள்ள பிராதன கும்பங்கள் வெளிவீதியினூடாக வலம் வந்து கோபுரத்தில் கும்பங்கள் முதல் சரிக்கபட்டு பின் கருவறையிலுள்ள விநாயகர் விக்கிரகத்துக்கு கும்பநீர் ஊற்றப்பட்டு பின் ஏனைய விக்கிரகங்களுக்கும் ஊற்றப்பட்டது.
இன்றைய கும்பாபிஷேக நிகழ்வில் புலம் பெயர் நாட்டிலிருந்தும், கொழும்பு, இலங்கையின் ஏனைய பகுதியிலிருந்தும் விநாயக பெருமான் அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் நல்லை ஆதீன முதல்வரும் கலந்து கொண்டிருந்தார்.
இன்றைய கும்பாபிஷேக தினத்தில் ஓதப்பட்ட மந்திரங்களும், யாக சாலைகளில் இருந்து வந்த புகையினாலோ வெயிலியில் வெந்து கொண்டிருந்த வல்வெட்டித்துறை பகுதியில் நெடுநாளைக்கு பின் காலையில் அடைமழை பெய்திருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.