நவாலியில் இடம்பெற்ற அஞ்சலி, சிவாஜியும் பங்கேற்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/07/2020 (வியாழக்கிழமை)
நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற விமானக் குண்டு வீச்சில் இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 147க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில் இன்றைய தினம் பொதுமக்கள் பலர் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
இன்றைய அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் நினைவு தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நினைவேந்தலில் சிவாஜிலிங்கம் மற்றும் பொது மக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மல்லாகம் நீதி மன்றில் தொடுக்கப் பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.