வல்வை விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவரும், வல்வை ரேவடி இளைஞர் விளையாட்டுக் கழக சகல விளையாட்டுத்துறை வீரருமான செல்வன் சிவநாதன் நிமலன் (குட்டி) இன்று மாலை காலமானார். கடந்த சில மாதங்களாக சுவாசக் கோளாறு காரணமாக இவர் மிகவும் பாதிக்கப் பட்டிருந்தார்.
பல துறை கலைஞரான செல்வன் நிமலன் பட்டக் கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.
வல்வை விக்கினேஸ்வரா சன சமூக நிலையத்தினால் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டிருந்த வண்ண (வி)சித்திரப் பட்டப்போட்டி-2015 இல் 1ம் இடத்தை பெற்தும் சகலரினதும் அதிலும் குறிப்பாக இளையோரினது வரவேற்பை பெற்றிருந்த தாஜ்மஹால் பட்டம் ஆகும்.
செல்வன் நிமலன் தமீழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) முன்னாள் மூத்த உறுப்பினர் அமரர் உலகராசா அவர்களின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ஞா. மனோகரன் (ஐக்கிய ராஜ்ஜியம்)
Posted Date: April 17, 2017 at 06:56
காதலுக்காக சாகவும்கூடாது
காதலிக்காமல் சாகவும்கூடாது.
.
காதலின் மகத்துவத்தை உனர்த்தும் இந்த அற்புதமான வரிகளை
விண்ணில் பறக்கவிட்ட தாஜ்மஹாலின் சிற்பி எமது நிமலன்
இவ்வளவு சின்ன வயதில் எம்மையெல்லாம் விட்டு விண்னுலகு எய்தியது மிகுந்த வேதனையை தருகிறது.
.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல எமது வல்வை நெடியகாட்டுப்பிள்ளையாரப்பனை வேண்டுகிறேன்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.