கடலில் காணாமல் போனவர் படகுடன் மீட்பு (மீள் பதிப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 02/09/2017 (சனிக்கிழமை)
நேற்று முன்தினம் வல்வெட்டித்துறை கடற் பிரதேசத்தில் காணாமல் போனவர், பயணித்த படகின் இயந்திரத்தில் எரிபொருள் தீர்ந்ததையடுத்து அவரால் கரைக்கு திரும்ப முடியவில்லை. இவரது படகு 25 கடல் மைல் தூரம் கிழக்கு நோக்கி பயணித்த போது ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு வந்திருந்த நீர்கொழும்பு சிங்கள மீனவர்கள் இவரை மீட்டு உணவு குடிதண்ணீர் வழங்கி படகின் இயந்திரத்தையும் சீர்செய்துள்ளனர்.
பின்னர் இயந்திரத்திற்குரிய எரிபொருளினையும் வழங்கி அவரது படகை தமது படகில் கட்டி இழுத்து வந்து பருத்தித்துறை கடற்பரப்பிற்கு 3 மைல் தொலைவில் கொண்டு வந்த சேர்த்தனர்.
பின்னர் சக மீனவர்கள இவரை சற்று முன்னர் பிற்பகல் 1 மணியளவில் பாதுகாப்பாக கரை கொண்டு வந்தனர்.
கரைதிரும்பியுள்ள இவர் உடல் பலவீனமடைந்த நிலையில் தற்பொழுது ஊறணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
நேற்று முன்தினம் காலை காலை படகு ஒன்றில் மீன் பிடிப்பதற்காகக்ச் சென்ற வல்வெட்டித்துறை கொண்டக்கட்டையைச் சேர்ந்த வடிவேலு ஸ்ரீகாந்த் என்பவரே காணாமல் போயிருந்தார்.
கடற் தொழிலுக்குச் செல்வதை நிறுத்தி, சக மீனவர்கள் பத்திற்கு மேற்பட்ட கடற்கலங்களில் இன்று காலை மீண்டும் தேடுதல் பணியை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கீழே படத்தில் ஊரணியில் சிகிச்சை பெற்று வரும் வடிவேல் ஸ்ரீகாந்த்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.