40 பாகங்களை தாண்டும் மர்மக்குழல் - Thriller serial
பிரசுரிக்கபட்ட திகதி: 04/11/2017 (சனிக்கிழமை)
ஈழத்தில் ஒரு குறும்படம் எடுப்பதற்கே பல சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. அவ்வாறு எடுத்து வருகின்ற படங்களும் நமக்கான சினிமாவை தருகிறதா என்றால் விரல் விட்டு எண்ணும் சிலவற்றை மட்டுமே கூறலாம்.
இந்நிலையில் ஈழத்தின் சின்னத்திரை நாடகங்கள் பற்றி பார்ப்போமானால் இதுவரை பல தொலைக்காட்சி நிறுவனங்கள் நாடகங்களை உருவாக்கினாலும்... ஆகக் கூடுதலாக 25 பாகங்களை கூட எட்ட முடியவில்லை .
இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது .தயாரிப்பு பிரச்சினை , தொழில்நுட்பம், இயலாமை , வல்லுனர்கள் இல்லை என பல காரணங்கள் கூறப்படுகிறது.
ஆனால் இந்த காரணங்கள் எல்லாவற்றையும் உடைத்து ஈழத்தின் தனித்துவம் , பண்பாடு , மொழி , கலாசாரம் என அத்தனை அம்சங்களையும் தாங்கி இன்றோடு 40 பகுதிகளை கடந்து வெற்றியோடு இன்னும் பல நூறு பகுதிகளை கடக்கத் தயாராகவுள்ளது ஈழத்தின் ஈடு இணையற்ற தொடர் 'மர்மகுழல்'. (Marmakkulal, marma kulal)
ஆம் IBC தமிழ் தொலைக்காட்சியினரின் தயாரிப்பில் ஈழத்தில் முற்று முழுதாக உருவாக்கபடும் ஓர் யதார்த்த காவியம் "மர்மக்குழல்" இதில் முக்கிய விடயம் இந்த தொடரில் பணிபுரிபவர்கள் அநேகமானவர்களுக்கு இது ஓர் புதிய களம்..,ஆனால் எந்த இடத்திலும் புதியவர்கள் போலான நடிப்பைக் காட்டிக்கொள்ளவில்லை என்பது இவர்களின் பலம் .
எந்த இடத்திலும் மிகைப்படுத்தப் படாத இயல்பான நடிப்பு , நேர்த்தியான ஒளிப்பதிவு , கலை , எம்மோடு பயணிக்கும் இசை , கதையின் ஆழம் , தேர்ந்த இயக்கம்.. என எல்லாம் சேர்ந்து ரசிக்க மட்டுமல்ல வியக்கவும் வைக்குறது .
ஈழத் திரையில் யாரும் தொடாத அல்லது எடுக்கத் தயங்கும் பல விடயங்களை திரையில் காட்டுவது இவர்களின் துணிச்சல்.ஆக ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய ஓர் படைப்பு இது.
ஆனால் இதை யாரும் இந்தியத் திரை நாடகங்களுடன் ஒப்பிட வேண்டாம் .இது எமக்கான தனித்துவம்,மொத்தத்தில் மர்மக்குழல் எங்கள் வாழ்வியல் பேசும் யதார்த்த காவியம் .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.