நிலநடுக்கம் பப்புவா நியுகினியாவின் Bougainville என்ற தீவுக்கு அருகாமையில் ஏற்பட்டுள்ளது. இதுநிலத்திற்கு அடியில் 136 கிலோ மீற்றர் ஆழத்தில் இடம்பெற்றதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.
3 மணித்தியாலங்களுக்குள் சுனாமி நிலைமை ஏற்படக்கூடுமென்று பசுபிக் சுனாமி எச்சரிக்கைப் பிரிவின் மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதனால் பப்புவா நியுகினியாவில் கரையோரத்திற்கும் சொலமன் தீவுப்பகுதிக்கும் சேதம் ஏற்படக்கூடும் என்றும் அந்த மத்திய நிலைம் தெரிவித்துள்ளது