வல்வையைச் சேர்ந்த திரு.வெற்றிவேல் என்பவரால் தயாரிக்கப்பட்ட மிகவும் எளிய முறையில் அமைந்த உயிர்காப்பு அங்கி (Life Jacket) ஒன்று சிங்கள சமூக வலைத் தளங்களிலும் அதனைத் தொடர்ந்து தமிழ் சமூக வலைத் தளங்களிலும் வைரலாக உலா வந்திருந்தது.
கடந்த 3 வருடங்கள் முன்பு வல்வையில் படகுச் சவாரி மேற்கொண்டிருநத பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் கிளிக் செய்து, குறித்த நபர் அண்மையில் சமூக வலைத் தளத்தில் பதிவேற்றிய படமே வைரலானது.
சிங்கள வாசகத்தில் 'யாழ் இளைஜனால் மிகவும் எளிய முறையில் தயாரிக்கப்பட்டுள்ள உயிர்காப்பு அங்கி' என கீழே காட்டப்பட்டுள்ள படத்துடன் பதிவேற்றப்பட்டுள்ளது.
படத்தில் தென்னிலங்கை சுற்றுலா பயணியுடன், படகின் ஒட்டியான வல்வை ரேவடியைச் சேர்ந்த திரு.கர்ணன், இருவரும் எளிய முறையில் செய்யப்பட்ட உயிர்காப்பு அங்கிகளுடன் காணப்படுகின்றார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.