நீண்ட காலத்தின் பின் தீருவிலில் ஒலிக்கும் எழுச்சிக்கானங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2017 (திங்கட்கிழமை)
சுமார் 12 வருடங்களின் பின்னர் வல்வை தீருவில் வெளியில் மாவீரர் எழுச்சிக் கானங்கள் தற்பொழுது ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இன்று பரவலாக நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளின் வரிசையில் வடமராட்சியில் எள்ளங்குளம் துயிலும் இல்லத்திற்கு பதிலாக வல்வையில் தீருவில் வெளியில் இடம்பெறவுள்ளது. இதனையொட்டி நிகழ்வுகளுக்கான இறுதி ஏற்பாடுகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது.
நிகழ்வைச் சிறப்பிக்கும் வண்ணம் தீருவில் வெளியில் ஒலி பரப்பிகள் கட்டப்பட்டு விடுதலைப் புலிகளின் மாவீரர் கானங்கள் தற்பொழுது ஒலிபரப்பப்பட்டு வருகின்றது. 2004 ஆம் ஆண்டின் பின்னர் இவ்வாறு நிகழ்வது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
2004 இல் சமாதான ஒப்பந்தத்தின் போது, யாழ்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாதிருந்த போதும், இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் ஞாபகாரத்த நிகழ்வுகளிற்கு அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.