வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பிரதான வீதியில் வன்னிச்சி அம்மன் கோயிலடியில் அமைந்துள்ள பழைய சத்திய நாதனின் சிலையடியில் சத்திய நாதன்(சங்கர்), பண்டிதர், மாலதி ஆகியோரின் உருவப் படம் திறந்து வைக்கப்பட்டன.
மாலை 06.05 மணிக்கு பண்டிதர் அவர்களின் தாயார் திருமதி சின்னத்துரை அவர்களினால் சுடர் விளக்கு ஏற்றப்பட்டு மூவரின் திருவுருவப்படங்களும் திறந்து வைக்கப்பட்டன. அத்துடன் இவர்களின் ஞாபகார்த்தமாக இதே பகுதியில் பண்டிதர் அவர்களின் தாயார் திருமதி சின்னத்துரை அவர்களினால் மரக் கன்று ஒன்றும் நாட்டு வைக்கப்பட்டது. நிகழ்வில் பண்டிதர் அவர்களின் தாயார் திருமதி சின்னத்துரை பொதுமக்களால் கௌரவிற்கப்பட்டார்.
சத்தியநாதன் (சங்கர்) விடுதலைப் புலிகள் அமைப்பில் மரணித்த முதலாவது போராளி என்பதும், பண்டிதர் அவர்கள் கம்பர்மலை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் என்பதும், மாலதி அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மரணித்த முதலாவது பெண் போராளி என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.