பருத்தித்துறைக்கு வட கிழக்காக வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2017 (வெள்ளிக்கிழமை)
வங்காள விரிகுடாவில் சென்னைக்கு கிழக்காக, பருத்தித்துறைக்கு வட கிழக்காக தாழமுக்கம் ஒன்று உருவாகலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
தற்பொழுது ஆய்வு நிலையில் (Invest) உள்ள இந்த தாழமுக்கம் மையம், இன்று காலை இலங்கை நேரம் 0230 மணியளவில் அகலாங்கு 11.8 வடக்கு மற்றும் நெட்டாங்கு 88.7 எனும் புள்ளியில் நிலை கொண்டுள்ளது. குறித்த பகுதியைச் சுற்றி காற்று 20 கடல் மைல்கள் வேகத்தில் வீசி வருகின்றது.
வங்காள விரிகுடா பகுதியில் வருடந்தோறும் மே மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரை சூறாவளி காலம் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழே படத்தில் ஆய்வு நிலையில் உள்ள தாழமுக்கதினைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.