இலங்கைக்கு கிழக்காக தாழமுக்கம், வடக்கின் மேலாக நகரவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2021 (புதன்கிழமை)
கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடாவின் தெற்குப் பகுதியில் நிலை கொண்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை (Cyclonic Circulation) காரணமாக, அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கம் (Low pressure) உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் ( India meteorological department) அறிவித்துள்ளது.
இத் தாழமுக்கம் ஆனது மேற்கு வடமேற்கு திசையில், இலங்கையின் வட பகுதிக்கும் தமிழகத்தின் தென் பகுதிக்கும் ஊடாக நகரவுள்ளது என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழிலும் பரவலாக இன்று மழை பெய்து வருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.