கீழே படத்தில் காணப்படுவது இன்று நண்பகல் வல்வைச் சந்தியில் காணப்பட்டது மாபெரும் வலம்புரிச் சங்கு ஒன்றின் உருவ அமைப்பாகும். இலங்கை தமிழ் FM ஒன்றின் விளம்பர நோக்கத்தோடு அமையப்பெற்ற இந்த வலம்புரிச் சங்கத் தாங்கிய வாகனம் யாழின் சகல இடங்களுக்கும் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாள் முழுவதும் குறித்த FM இல் வலம்புரி மந்திரம் ஒன்று ஒலிபரப்ப்படுவதாயும், குறித்த அந்த நேரத்தை எழுதி எத்தனை தபால் அட்டைகள் மூலமாகவோ அல்லது குறித்த வலம்புரி குழுவினர் ஊர்களுக்கு வரும்போது ஒரு தபால் அட்டையிலோ அல்லது அது போன்ற ஒரு அட்டையிலோ பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் வலம்புரி மந்திரம் ஒலிபரப்பாகிய நேரம் அத்துடன் வாசகர்களின் கனவு ஆகியவற்றை குறிப்பிட்டு கையளித்தால் பரிசில்கள் கிடைக்கப் பெறலாம் எனவும் குறித்த வானொலி அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.