19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையில் நடாத்தப்படும் "கொத்மலை சொக்ஸ் 2016" சுற்றுத்தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் எதிர்வரும் கார்த்திகை மாதம் 04 ஆம் மற்றும் 06ம்திகதிகளில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட முன்னனி பாடசாலைகளின் 19 வயதுப் பிரிவினர்களுக்கிடையில் நடாத்தப்படும் "கொத்மலை சொக்ஸ்: 2016" கிண்ணத்திற்கான சுற்றுப்போட்டிகளில், வடமாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இரு பாடசாலைகளான சென் பற்றிக்ஸ் மற்றும் ஹென்றியரசர் ஆகிய இரு கல்லூரிகளும் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியதன் பலனாக தற்போது சொந்த மண்ணில், தமது ரசிகர்களின் ஆதரவிற்கு மத்தியில் பங்குபற்றவுள்ளன.
நான்காம் திகதி நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டங்களில், 5.00 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியாட்டத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி, சென்.ஜோசப் கல்லூரியையும், இரவு 7.00 மணிக்கு நடைபெறும் மற்றய அரையிறுதியில் ஹென்றியரசர் கல்லூரியை எதிர்த்து ஷாகிறா கல்லூரி மோதவுள்ளமை குறிப்பிடத்தககது.
இதில் இரண்டாவது அரையிறுதியில் மொதவுள்ள ஹென்றியரசர், ஷாகிறா அணிகளே கடந்த முறை நடைபெற்ற "கொத்மலை சொக்ஸ்:15" கிண்ண இறுதியாட்டத்தில் மோதியிருந்தமையும், அதில் ஹென்றியரசர், அவர்களின் சொந்த மைதானத்தில், பலத்த ரசிகர்களின் ஆதரவிற்கு மத்தியில் 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் 6ம் திகதி மாலை 5.00 மணிக்கு மூன்றாம் இடத்திற்கான போட்டியும், இரவு 7.00 மணிக்கு இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4th November 2016
St. Patrick’s College Vs St. Joseph Vaz College 5.00 pm
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.