கொம்மந்தறை மணோண்மணி ஆலய குடமுழுக்கு இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 01/09/2017 (வெள்ளிக்கிழமை)
கொம்மந்தறை மணோண்மணி ஆலய மகா கும்பாவிஷேகத்தை ஒட்டி குடமுழுக்கு இன்று இடம்பெற்றது. மகா கும்பாவிஷேகம் எதிர்வரும் 03.09.2017 ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது.
பிரதிஷ்டை பிரதம குரு சிவாகம கிரியா கலாநிதி ,தேசமானிய சிவஸ்ரீ இ.பாலகிருஷ்ணக்குருக்கள் தலமையில் நடைபெற இருக்கும் இந்த மகா கும்பாவிஷேக கிரியைகள்(கர்மாரம்பம்) எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
அத்துடன் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு எதிர்வரும் முதலாம் திகதி 8மணி தொடக்கம் இரண்டாம் திகதி நண்பகல் வரை நடைபெற இருக்கின்றது. அதனைத் தொடர்ந்து 10நாள் திருவிழாவும் தொடர்சியாக 45நாட்களுக்கான கிரிகைகளும் நடைபெற இருக்கின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.